×

கால்நடை துறையுடன் இணைந்து பறவை காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொதுசுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் சில இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பறவை காய்ச்சலுக்குள்ளான கோழிகள், பிற பறவையினங்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பாதிப்பு பரவும், காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறி. எனவே கால்நடை துறையுடன் இணைந்து பறவை காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வகை தொற்றால் பாதிக்கப்படும் பறவைகள் குறித்தும் அதன் மூலம் மனிதர்களுக்கு காய்ச்சல் பரவினால், அதுகுறித்த தகவல் பொது சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் தனிநபர் சுகாதாரம் பேணுதல், கை கழுவுதல்குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்துதல் அவசியம். பாதித்தவர்களிடமிருந்து பரவாமல் தடுக்க முகக்கவசம் அணியவும் அறிவுறுத்த வேண்டும்.

The post கால்நடை துறையுடன் இணைந்து பறவை காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொதுசுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kerala ,Tamil Nadu ,Public Health Director ,Selvavinayagam ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் முகாமிட்ட யானை உயிரிழப்பு